தேச வளர்ச்சியை வெறுக்கும் இரட்டை முகம் கொண்டவர்கள்: அண்ணாமலை

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (18:47 IST)
தேச வளர்ச்சியை வெறுக்கும் இரட்டை முகம் கொண்டவர்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதய்பூரில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் குறித்து குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் அவர்களது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு தடம்புரண்டமைக்கு அம்மாநில முதல்வர் மற்றவர்களைக் குறை சொல்கிறார். 
 
நமது மாண்புமிகு பாரத பிரதமரின் எண்ணம், செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகவே உள்ளது. ஆனால் தேச வளர்ச்சியை வெறுக்கும் இரட்டை முகம் கொண்டவர்களோ தொடர் தோல்வியிலிருந்து மீளப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகிறார்கள்! 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்