2024 பாராளுமன்ற தேர்தல்: 25 தொகுதிகளை குறி வைக்கும் அண்ணாமலை

Webdunia
வியாழன், 12 மே 2022 (09:01 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் தமிழக பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணாமலை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதிக்கு மேல் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற்றதில்லை என்ற வரலாறு இருக்கும் நிலையில் இந்த முறை குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் வகையில் கட்சி நிர்வாகிகளை இப்போது பணிகளை துவக்க வேண்டும் என தமிழக பாஜக அண்ணாமலை கூறியுள்ளார்
 
கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்து கொள்ளும் என்றும் நாம் களப்பணியில் இறங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக பாராளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்