நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா..? அண்ணாமலை

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (16:29 IST)
ஊர்ல உள்ள நாய் பேய் சாராயம் விற்கிறவனுக்கெல்லாம்  நான் பதில் சொல்ல வேண்டுமா என அண்ணாமலை ஆவேசமாக செய்தியாளர்களிடம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து அண்ணாமலை ஆவேசமாக ஆளும் கட்சி மீது குற்றம்சாட்டிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று பேட்டியளித்தார்
 
அப்போது அவர் அண்ணாமலையிடம் தான் முதலில் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை பக்குவம் இல்லாமல் பேசுகிறார் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியபோது ஊரில் இருக்கிற நாய் பேய் சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
மேலும் திமுக அரசின் சாராய அமைச்சர் அரசுக்கு தெரியாதது அண்ணாமலைக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். பொதுமக்களும் அரசு இயந்திரங்களும் எதை நோக்கி நகர்கிறது என்பதை இது காட்டுகிறது என்று கூறிய அண்ணாமலை அரசின் இயலாமையை வெளிப்படுத்தும் சாராய அமைச்சர் சொல்வதை ஏற்றுக் கொண்டு முதல்வர் பதவி விலகுவாரா என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்