நவம்பரில் தமிழகம் வருகிறாரா பிரதமர் மோடி? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (16:16 IST)
நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்கு தமிழகம் வர இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவ்வாறு எந்த திட்டமும் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவிருப்பதாகவும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பட்டம் அளிப்பு விழா நடைபெறவில்லை என்ற நிலையில் இந்த ஆண்டு 36 வது பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது
 
 இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்