அண்ணா பல்கலைகழகத்திற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு மற்றும் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த கட்டுப்பாடுகள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அண்ணா பல்கலைகழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.
மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு மற்றும் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்விற்கான வினாத்தாள்கள் அரைமணி நேரத்திற்கு முன்னதாக கூகிள் க்ளாஸ் ரூம் மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலமாக அனுப்பப்படும்.
தேர்வுகள் காலை 9.30 முதல் 12.30 வரையிலும், பிற்பகல் 2.30 முதல் 5.30 வரையிலும் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.