விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி கார் உடைப்பு! – அழைப்பிதழில் பெயர் போடாததால் வன்முறை!

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (10:56 IST)
கோவையில் அழைப்பிதழில் பெயர் போடாத விவகாரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகியின் கார் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவராக ராமகிருஷ்ணன் என்பவர் உள்ளார். அமைப்பு சார்பில் நோட்டீஸ் அடிக்கும்போது அதில் சிலரது பெயரை ராமகிருஷ்ணன் அச்சடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது சொந்த அமைப்பினர் சிலர் அவரது வீட்டிற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு அவர் வீட்டின் முன்பிருந்த காரை அமைப்பினர் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் வி.எச்.பி அமைப்பின் மாவட்ட நிர்வாகி ராமகிருஷ்ணன் கார் கண்ணாடியை , அந்த அமைப்பை சேர்ந்தவர்களே சேதப்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அழைப்பிதழில் பெயர் போடாததால் ஆத்திரமடைந்த உறுப்பினர் ஆவேசம். @News18TamilNadu pic.twitter.com/jEHqTqiFGV

— Gurusamy (@gurusamymathi) August 17, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்