அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. எஃப்.ஐ.ஆரில் உள்ள அதிர்ச்சி தகவல்..!

Siva

வியாழன், 26 டிசம்பர் 2024 (09:24 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநில முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வழக்கின் எஃப் ஐஆர் குறித்த தகவல்கள் வெளியாகி கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எஃப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்களில், ‘நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தர வைப்பேன் என மிரட்டினான்

மேலும் செல்போனில் இருந்த எனது தந்தையின் எண்ணை எடுத்துக்கொண்டு அவருக்கு வீடியோ அனுப்புவேன் என மிரட்டினான். நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் எங்களை விடுவதாக இல்லை, அவன் தொடர்ந்து மிரட்டினான். அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தான்’ என்று கூறியதாக எஃப்.ஐ.ஆரில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஞானசேகரன் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தீர விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கைது செய்ய முயன்ற போது தப்பிக்க முயற்சித்ததாகவும் இதனை அடுத்து ஞானசேகரன் கீழே விழுந்ததால் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்