இந்த நிலையில் எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள் தூத்துக்குடி காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் ரவுடிகள் சுட்டுக்கொலை செய்த வழக்கு இன்று சென்னை நீதிமன்றத்தில் வந்தபோது தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்கச் சென்றபோது வெடிகுண்டு வீச்சில் சுப்பிரமணியன் என்ற காவலர் உயிரிழந்தது குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது வேதனை அளிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் வருத்தத்துடன் பதிவு செய்தது
மேலும் தமிழகத்தில் சில ரவுடிகள் காவல்துறையோடும், அரசியல் கட்சிகளுடனும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கூட்டணி வைத்திருப்பதாகவும், ரவுடிகள் அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பது தெரிய வருவதாக தெரிவித்த நீதிபதிகள், போலீசார் தாக்கப்படும் சூழல் அதிகரித்து வருவதாகவும், போலீசார் தாக்கப்படுவது தொடங்கிவிட்டாலே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளதாக நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது