இந்த தற்கொலைக்கும் ஆளுநரே பொறுப்பு.. கவர்னர் மீது அன்புமணி குற்றச்சாட்டு..!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (18:45 IST)
இன்று மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த தற்கொலைக்கும் கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
மதுரை அருகே சாத்தமங்கலத்தில்  ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர்  தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்  ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 42ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 13ஆவது தற்கொலை இது. இதுவரை நடந்த தற்கொலைகளுக்கும், இந்த தற்கொலைக்கும் ஆளுநரே பொறுப்பேற்கவேண்டும்!
 
ன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு 112 நாட்கள் ஆகிவிட்டன. அதுகுறித்து ஆளுநர் எழுப்பிய ஐயங்களுக்கு, சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் விளக்கம் அளித்து 68 நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் சட்டத்திற்கு இன்றுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது முறையல்ல!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்