கொ.ம.தே.க மற்றும் IUML கட்சிகளுக்கு எந்த தொகுதி ஒதுக்கிடு?

Sinoj
சனி, 24 பிப்ரவரி 2024 (20:50 IST)
விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன.
 
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக  காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில்,  இன்று, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய 3 கட்சிகளுக்கும்  தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்ய திமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இன்று இதுகுறித்து முக்கிய அறிவிப்பை திமுக வெளியிடும் என்று கூறப்பட்டது. அதன்பைட்,   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியை  ஒதுக்கியது திமுக., கடந்தமுறை போட்டியிட்டு வென்ற இராம நாதபுரம் தொகுதியில் IMUL மீண்டும் போட்டியிடுகிறது.

அதேபோல் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக 1 தொகுதி ஒதுக்கியுள்ளது. கடந்த முறை வென்ற நாமக்கல் தொகுதியிலயே   உதய சூரியன் சின்னத்தில் கொ.ம.தே.க போட்டியிட உள்ளது. 

இந்தத் தொகுதிப் பங்கீட்டில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். மதிமுகவுக்கு எந்த தொகுதி என்பது இன்று  வெளியிடப்படும் என தெரிகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்