பாஜகவுடன் கூட்டணி இல்லையா? மத்திய அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்த ராமதாஸ்..!

Mahendran

சனி, 24 பிப்ரவரி 2024 (15:02 IST)
பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாமக தரப்பில் இருந்து செய்திகள் வெளியான நிலையில் தற்போது டாக்டர் ராமதாஸ் மத்திய அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதை அடுத்து பாஜகவுடன் பாமக கூட்டணி சேர வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு பாமக நிறுவனர் கண்டனம் தெரிவித்து கூறி இருப்பதாவது:

கர்நாடகத்தின் பிரதிநிதியாக மத்திய நீர்வள அமைச்சர் பேசுவது கண்டிக்கத்தக்கது.  மேகதாது அணை சிக்கலில்  சட்டமும், உச்சநீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத் தீர்ப்பும் என்ன சொல்கிறதோ? அதன்படி தான் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சரின் தனிப்பட்ட கருத்தை யாரும் கேட்கவில்லை. மத்திய அமைச்சர் ஷெகாவத் கூறியிருப்பதும் தேவையற்றது!

மேகதாது அணையை  தடுக்கக் கூடாது என்று தனிப்பட்ட கருத்தை கூற வேண்டிய தேவை என்ன? தமிழ்நாடு & கர்நாடகம் இடையே நீதிபதியாக செயல்பட வேண்டிய மத்திய அமைச்சர் ஷெகாவத், கர்நாடகத்தின் வழக்கறிஞராக  மட்டும் செயல்பட வேண்டிய தேவை என்ன? என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்