விஜயதாரிணி வருகையால் பாஜகவில் என்ன நடக்கும்? அண்ணாமலை

Mahendran

சனி, 24 பிப்ரவரி 2024 (18:00 IST)
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருக்கும் விஜயதாரணி திடீரென பாஜகவில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஜயதாரிணி வருகையால் பாஜகவுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவ தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி விஜயதாரிணி  அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி  அவர்களின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் திரு அரவிந்த் மேனன்  மாநில இணை பொறுப்பாளர் திரு சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

சகோதரி விஜயதாரிணி அவர்களை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் ‘வரும் 2024 பாராளுமன்ற தேர்தல், தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கான தேர்தல்.  எந்த வேலையும் செய்யாத கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு வேண்டாம். ஊழல் குடும்ப அரசியல் நமக்கு வேண்டாம். ஓய்வின்றி உழைக்கும் நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த, அடுத்து வரும் நாட்களில் நாம் அனைவருமே நமது பிரதமர் மோடி அவர்களைப் போல ஓய்வின்றி உழைத்து, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம். 2026 அரசியல் மாற்றத்திற்கு வித்திடுவோம்
 என்று பதிவு செய்துள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்