இனி Unknown நம்பரில் இருந்து அழைப்பு வந்தால்? புதிய தகவல்

Sinoj
சனி, 24 பிப்ரவரி 2024 (19:40 IST)
இன்றைய உலகில் எல்லோருடமும் கைபேசியை  பயன்படுத்தி வருகின்றனர். அன்றாட வாழ்வில் அத்தியாவசியமாகவே செல்போன் மாறிவிட்டது.
 
இதன் மூலம் தகவல் தொடர்பு திறன் அதிகரித்தாலும், இதைப்பயன்படுத்தி பலர் தவறான வழிகளிலும் செல்கின்றனர்.
 
இந்த நிலையில், ஒருவருக்கு கால் வரும் போது கான்டக்டில் இருந்தால் மட்டுமே பேர் காட்டும். மற்றபடி காட்டாது. இந்த நிலையில் Unknown நம்பரில் இருந்து  கால் வந்தால் அவரது பெயரை திரையில் காட்டும் அம்சத்தை  பயனர்களுக்கு வழங்குமாறு செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிவுறுத்தியுள்ளது.
 
சோதனை முறையில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், ஏற்கனவே True Caller App இந்த அம்சங்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்