பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் ஆச்சரியம்

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (13:10 IST)
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் ஆச்சரியம்
பெரம்பலூர் மாவட்டத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் அதனை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஓதளூர் என்ற கிராமத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் ஆலங்கட்டி எடுப்பதில் தீவிரமாக இருந்தனர்
 
இதுகுறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்