திமுகவில் அழகிரி புயல்: அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன்

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (16:04 IST)
வானிலையில் மட்டுமின்றி திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும், புயலுக்கு அழகிரி என்று பெயரிடலாம் என்றும் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் நாளை திமுக செயற்குழு கூட்டம் முதல்முறையாக நடைபெற உள்ளது. இதில் திமுக கட்சியின் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரை கட்சியில் சேர்க்க அவரது ஆதரவாளர்கள் சிலர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இதைத்தொடர்ந்து இன்று காலை தனது குடும்பத்தினருடன் திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி தனது ஆதங்கத்தை இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் தெரிவிப்பேன் என்று கூறினார்.
 
இதையடுத்து திமுக கட்சியில் சிக்கல் ஏற்படும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அதிமுக எம்.எல்.ஏ. வைகைச்செல்வன் இதை கேலியாக கூறியுள்ளார்.
 
அவர் கூறியுள்ளாதாவது:- 
 
திமுகவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. வானிலையில் மட்டுமின்றி திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. திமுகவில் உருவாகியுள்ள புயலுக்கு அழகிரி என்று பெயர் வைக்கலாம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்