பிரதமர்நரேந்திரமோடிஇன்று (மார்ச் 6) மூன்றாவது முறையாக தமிழகம்வரவுள்ளநிலையில்கூட்டணியில் கூட்டணியை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.
பிரதமர் மோடி இன்று மூன்றாவது முறையாக தமிழகம் வர இருக்கிறார். தமிழகத்தில் பாஜக கூட்டணி இடம்பெற்றுள்ள அதிமுக அணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 100 ஏக்கர் நிலத்தில் பிரமமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியக் கட்சிகள் இணைந்து அவர்களுக்கான சீட்களைப் பெற்றுக்கொண்டு விட்டன. இன்னமும் தேமுதிகவும், தமாகவும் மட்டுமே இணையாமல் உள்ளன. தேமுதிக நீண்ட காலமாக தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடில்லாமல் கூட்டணிக்குள் வராமல் இழுத்தடித்து வருகிறது.
கடந்த சில தினங்களாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதனால் இன்று தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதுபோல தமாகவும் தங்களுக்கு கொடுக்கப்பட இருக்கும் ஒரு தொகுதியைப் பெற்றுக்கொண்டு கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விருக் கட்சிகளையும் இன்று காலையே கூட்டணிக்குள் இழுக்க அதிமுக மும்முரம் காட்டி வருகிறது. அப்போதுதான் மாலை நடக்கும் பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் மற்றும் வாசன் உள்ளிட்டோரை கூட்டணி மேடையில் தோன்றவைக்க முடியும் என யோசித்து வருகிறது. மோடி மாலை 3 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.