இதற்காக நடிகர் சித்தார்த் பிரதமர் மோடியை விமர்சித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ''நம் தேசத்தின் மக்கள் நம் நாட்டு ராணுவத்துடனும் ராணுவ வீரர்கள் பக்கமும்தான் நிற்கிறார்கள். நீங்களும் உங்கள் கும்பலைச் சேர்ந்தவர்களும்தான் நம்புவதில்லை. முதலில் புல்வாமாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்.
அதில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பபட்டனர், காயமடைந்தனர். அப்போது விமானப்படை தாக்குதல் நடத்த அனுமதி கேட்ட போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் மோடி அரசு நமது படையினருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. எனவே ஒரு நடிகர் தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.