ஒன்றரை மாதத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கவிழும்: முக ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (12:42 IST)
விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்று இறுதி கட்ட பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அதிமுக ஆட்சி குறித்து ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
 
இன்னும் ஒன்றரை மாதத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிவரும் என்றும் அந்த வழக்கின் தீர்ப்பு வந்தால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கவிழும் என்றும் கூறினார்
 
தற்போது அதிமுக ஆட்சி தொடர்வதற்கு தேவையான எம்.எல்.ஏக்களில் 5 எம்.எல்.ஏக்கள் மட்டுமே அதிகமாக உள்ளனர். ஓபிஎஸ் மீதான வழக்கு முடிவுக்கு வந்த பின்னர் 11 எம்எல்ஏக்களின் பதவி போய்விடும் .அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தானாகவே வந்துவிடும் என்று ஸ்டாலின் தெரிவித்தார் 
 
அதிமுக ஆட்சி கவிழும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த இரண்டு வருடங்களாக கூறிக் கொண்டு வந்த போதிலும் அதிமுக அரசு தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்