தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் வசூல் மழை பொழிந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனுஷ், வெற்றிமாறன் உள்பட படக்குழுவினர்களை பாராட்டினார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் எனது பாராட்டுகள்’ என்று தெரிவித்திருந்தார்.
முக ஸ்டாலின் இந்த பாராட்டு குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், ‘பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்! என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.