ரஜினி அப்படி என்ன தப்பா சொல்லிட்டாரூ... முட்டுக்கொடுக்கும் ஜெயகுமார்!

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (18:07 IST)
வன்முறை தீர்வாகாது என்று தான் நடிகர் ரஜினிகாந்த் கூறினார் அதில் தவறில்லை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி. 
 
நாடெங்கும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவருகின்றன. போராட்டக்காரர்களை ஒடுக்க போலிஸார் பல இடங்களில் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். இதனால் சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.  
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கின்றன என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  
 
இதனை எதிர்த்து திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பேசியிருந்தனர். அதேபோல இணையவாசிகளும் ரஜினியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.  
 
இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக பேட்டியளித்துள்ளார். ஜெயகுமார் கூறியதாவது, ஜனநாயக ரீதியில் நடைபெறும் போராட்டங்கள் அனுமதிக்கப்பட்ட ஒன்று எனவும், அவ்வகை போராட்டங்களுக்கு எப்போதும் அனுமதி உண்டு.
 
வன்முறை தீர்வாகாது என்று தான் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். போராட்டமே தேவையில்லை எனக் கூறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் ரஜினிக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்