தினகரன் கொடிக்கு எதிராக அதிமுக வழக்கு

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (13:23 IST)
ஆர். கே. நகர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் அணியின் கொடிக்கு எதிராக அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பி.எஸ் ஆகியோருக்கு எதிராக தினகரன் நேற்று மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அணியை தொடங்கினார். மேலும், கருப்பு வெள்ளை சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் உருவம் இருப்பது போன்ற அணியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.
 
இந்த கொடியில் ஜெயலலிதாவின் படம் இருப்பதால் தினகரன் அணி கட்சி கொடியை பயன்படுத்த கூடாது என அதிமுக கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், அதிமுக கட்சி கொடி போலவே தினகரன் அணியின் கொடி உள்ளதாகவும் அந்த மனுவில் கூறிப்பிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்