அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் எவை எவை என தற்போது பார்ப்போம்
கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா இல்லம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.
அரசு பணிகளில் இடம் பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி உறுதியாக வழங்கப்படும்.
பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்குடன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மா வாஷிங்மிஷின் வழங்கப்படும்
மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
கோவை மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும்.
கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2G டேட்டா இலவசமாக வழங்கப்படும்
வீட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும்
காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய கல்லூரி தொடங்கப்படும்
மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி ரூ. 2,500 ஆக உயர்வு
அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ 10 ஆயிரம் வரை வட்டியில்லாக் கடன்.