தமிழக 14 வது சட்டமன்றத் தேர்தல் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 234 தொகுதிகளைக் கொண்ட இந்த சட்டசபைத் தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி 146 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.