ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 முதல் நடைபெற்று வரும் நிலையில் 25000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக கூட்டணியின் வேட்பாளர் தென்னரசு தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் 70-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதிமுக வேட்பாளர் தென்னரசு மற்றும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் ஆகிய இருவருக்கும் மத்தியில் தான் உண்மையான போட்டி நடைபெற்று வருகிறது. இரு தரப்பிலும் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் ஈரோடு தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது
பொதுமக்கள் விறுவிறுப்பாக வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் தென்னரசு 25000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்
ஆளுங்கட்சி மீது உள்ள அதிருப்தி காரணமாக அதிமுக கூட்டணிக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்