ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் எந்த விதமான அசம்பாவிதமும் இதுவரை நிகழவில்லை என்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.