பாஜகவில் இணைகிறாரா விஷால்? எல்.முருகனை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல்

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (14:12 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ ஒருவர் பாஜகவில் சேர இருப்பதாக கடந்த சில நாட்களாக ஒரு செய்தி ஊடகங்களில் கசிந்து வருவது தெரிந்ததே. அந்த வகையில் அந்த முன்னணி ஹீரோ சிவகார்த்திகேயன் என்று தவறாகவும் ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஆக்ஷன் ஹீரோ விஷால் தான் பாஜகவில் சேர உள்ள அந்த ஹீரோ என்பது தெரியவந்துள்ளது. விஷால் விரைவில் பாஜகவில் சேர இருப்பதாகவும் இதற்காக அவர் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் விரைவில் இருவரது சந்திப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது அதன் பின்னர் ஒரு பிரமாண்டமான விழா நடத்தி அதில் பாஜகவில் விஷால் இணையும் நிகழ்வு நடக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
கடந்த சில நாட்களாகவே மத்திய-மாநில அரசுக்கு ஆதரவான கருத்துக்களை கூறிவரும் விஷால் சமீபத்தில் தன் கங்கனா ரனாவத்தை அவர் பகத்சிங் போல நடந்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பாஜகவில் விஷால் சேர உள்ளதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து இப்போதே அவரை சங்கி என்று நெட்டிசன்கள் அழைக்கத் தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்