இந்நிலையில் இந்த முறைகேட்டில் அதிமுக மற்றும் பாஜக தொடர்பு இருப்பதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிசான் நிதி மோசடி குறித்து பேசியுள்ள தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி “விவசாயிகளுக்கான கிசான் நிதி திட்டம் மத்திய அரசுடையது என்றாலும், அதனை செயல்படுத்துவது மாநில அரசுகளே.. எனவே முறைகேடு நடந்ததற்கான பொறுப்பை மாநில அரசே ஏற்க வேண்டும்” என கூறியுள்ளார்.