திடீர் திருப்பம் - விஷாலை கட்டித் தழுவி பாராட்டிய சிம்பு

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (16:32 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று சென்னை தி.நகரில் நடைப்பெற்றது. 


 

 
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய அணி பொறுப்பேற்று 18 மாதங்கள் கழித்து தற்போது பிரம்மாண்டமாக அமையவுள்ள புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைப்பெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.  
 
இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக பகீரங்கமாக பல கருத்தை கூறியதோடு, அவர்களை எதிர்த்து களம் இறங்கி தோல்வியை சந்தித்த நடிகர் சிம்பு, இதில் கலந்து கொள்ளமாட்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதோடு, நடிகர் விஷாலை கட்டித் தழுவி தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த விவகாரம் அங்கிருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.
அடுத்த கட்டுரையில்