இந்த சந்திப்பின்போது திமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, திமுக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை கேட்போம். அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.