7 வயது மகளை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

புதன், 23 ஜூலை 2025 (10:54 IST)
சென்னை அருகே, 7 வயது மகளை தந்தையே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை அயனாபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் - ரெபெகா தம்பதியினருக்கு 7 வயதில் ஸ்டெஃபி என்ற மகள் இருந்துள்ளார். சதீஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பச் சண்டை நடந்து வந்துள்ளது.
 
கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து, அதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சதீஷ்குமார் தனது மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாகவும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
 
இந்நிலையில், சதீஷ்குமார் தனது ஏழு வயது மகள் ஸ்டெஃபியை தனியாக அழைத்துக்கொண்டு, ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அங்கு, மனைவியை பழிவாங்க வேண்டும் என்ற வெறியில், மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கொலையை நிகழ்த்திய பின்னர், சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
 
இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த விடுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர். இது குறித்து சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதற்கிடையில், குழந்தையின் மரணத்திற்கு தாய் மற்றும் தந்தை இருவருமே காரணம் என்றும், இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் குழந்தையின் உறவினர்கள், ஸ்டெஃபியின் சடலத்தை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்