தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் திமுகவிற்கு ஆதரவாக இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தி பேசியதாக இந்திரக்குமார் தேரடிக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ் முஸ்தபா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் “ஜூலை 22-ம் தேதி மாலை முரசு தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாளர் என்ற முறையில் நான் கலந்து கொண்டேன். ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் இந்திர குமார் தேரடி கலந்து கொண்டார். இந்த விவாத நிகழ்ச்சியில் அவரவர் கருத்துக்களை பதிவு செய்தோம்.
ஒருகட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குசதவிகிதம் குறித்தும். தலைவர் விஜய் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, 2026 சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள். ஆளும் தி.மு.க. மண்ணை கவ்வப்போகிறது என்ற வகையில் எனது கருத்துக்களை முன்வைத்தேன்.
இதனை பொறுத்த கொள்ள முடியாத ஊடகவிலயாளர் இந்திர குமார் தேரடி, தி.மு.க.வுக்கு வாக்காலத்து வாங்குவதாக நினைத்து கொண்டு என்னை நோக்கி, உங்கள் தலையில் எதைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?" என இஸ்லாமியர்களின் அடையாளமாக இருக்கக்கூடிய தொப்பியை பற்றி இழிவான கருத்துக்களை பதிவு செய்தார்.. மக்கள் நேரடி ஒளிபரப்பை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்,
இந்திரகுமார் தேரடியின் இந்த கருத்து ஓட்டுமொத்த இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தி இருக்கிறது. ஆளும் தி.மு.க. மீது விமர்சனங்கள் முன்வைத்தால், ஊடகவியலாளர் போர்வையில் இந்திரகுமார் தேரடி போன்ற நபர்களை அறிவாலயம் விலைக்கு வாங்கி வைத்து கொண்டு இழிவான செயலில் ஈடுபடுகிறது. விமர்சனங்களை ஏற்றுகொள்ள முடியாத இந்த ஆட்சியாளர்கள் வெட்கி தலைகுனியா வேண்டும்.
பொது விவாத மேடைகளில் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர்கள் நடுநிலையான கருத்துக்களை பதிவு செய்வது வழக்கம். ஆனால் இந்திரகுமார் தேரடி பொதுவிவாத நிகழச்சிகளில் கலந்து கொள்ளும் போது ஊடகவியலாளர் என்ற போர்வையில் தி.மு.க.வின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார். ஊடகவியலாளர்கள் மீதும் ஊடகங்கள் மீதும் எனக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு.
ஆனால் ஊடகவியலாளர் என்ற போர்வையில் இந்திரகுமார் தேரடி பொது விவதாங்களில் ஆளும் தி.மு.க.விற்கு ஜால்ரா அடிப்பதற்காக, விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மற்றவர்களை அநாகரீகமாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள் குறித்து பேசிய அவதூறு கருத்துக்களை இந்திரகுமார் தேரடி திரும்ப பெறுவதோடு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். விலைக்கு வாங்கி ஆயிரம் இந்திரகுமார் தேரடி போன்றவர்களை ஆளும் தி.மு.க. களத்தில் இறக்கிவிட்டாலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் மரண தோல்வியை சந்திக்க போவது உறுதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”
Edit by Prasanth.K