முதல்முறையாக கேக் அறிமுகம் செய்யும் ஆவின் நிறுவனம்.. விற்பனை எப்போது?

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (09:34 IST)
தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பால் தயிர் மட்டுமின்றி புதுப்புது பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் விரைவில் ஆவின் நிறுவனம் கேக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது 
 
கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விரைவில் வருவதை ஒட்டி முதல் முறையாக ஆவின் நிறுவனம் நான்கு வகையான கேக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வழியுள்ளது
 
வெண்ணிலா சாக்லெட் உள்ளிட்ட பிளேவர்களில் தயாராகும் இந்த கேக்குகளை இந்த மாதமே விற்பனைக்கு கொண்டுவர ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஏற்கனவே ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கேக் வகைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்