“பாடல்கள் மாஸா இருக்கும்… இப்ப எதுவும் கேக்காதீங்க”… துணிவு அப்டேட் கொடுத்த ஜிப்ரான்!

புதன், 16 நவம்பர் 2022 (08:55 IST)
துணிவு படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணிகளான டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஆகியவை தொடங்கியுள்ளன. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு ப்ரோமோ பாடலை தற்போது சென்னையில் படமாக்கி வருகின்றனர். நடன இயக்குனர் கல்யாண், இந்த பாடலுக்கு நடனம் அமைக்கிறார். சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த பாடலை படமாக்கி வருகின்றனர்.

வலிமை படத்துக்கு பின்னணி இசையமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பொது இடத்தில் ரசிகர்களை சந்தித்த அவரிடம் துணிவு பாடல்கள் குறித்து ஆர்வமாக ரசிகர்கள் கேட்டனர். அதற்கு அவர் “பாடல்கள் எலலாம் மாஸ் ஆக இருக்கும். இப்போதைக்கு வேறு எதுவும் கேக்காதீர்கள்” என்று கூறிவிட்டு சென்றுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்