ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வின் ஜிமிக்கு கம்மல் நடனம் - வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (11:13 IST)
கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வான ஆறுக்குட்டி ஜிமிக்கு கம்மல் பாட்டிற்கு நடனம் ஆடும் வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
ஓணத்தையொட்டி, கேரள பெண்கள் நடனம் ஆடிய  ஜிமிக்கி கம்மல் பாட்டு இணையத்தில் சமீபத்தில் வைரலானது. கடைசியில் அந்த பாட்டிற்கு நடிகர் மோகன்லால் நடனம் ஆடும் அளவிற்கு அப்பாடல் பிரபலமானது.
 
இந்நிலையில், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வான ஆறுக்குட்டி அந்த பாட்டிற்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. உண்மையில் அவர் நடனம் ஆடியது அந்தப் பாடலுக்கு அல்ல. ஆர்.கே.நகர் தொகுதி பிரச்சாரத்தின் போது ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவாக வித்தியாசமாக நடனம் ஆடி அவர் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.
 
அந்த வீடியோவில்தான் நம்ம ஆட்கள் ஜிமிக்கி கம்மலை சொருகி விட்டார்கள். ஆனாலும், ரசிக்கும்படியான அந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்