பொங்கல் பரிசில் ஷேர் கொடுக்காத மனைவி: போட்டுத்தள்ளிய கணவன்

Webdunia
சனி, 12 ஜனவரி 2019 (12:28 IST)
பொங்கல் பரிசில் பங்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பரிசாக பல குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த பொங்கல் பரிசை வாங்க பொதுமக்கள் ரேசன் கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
 
உசிலம்பட்டி அருகே ஏழுமலை பகுதியை சேர்ந்த ராமர் என்ற 75 வயது முதியவர், தனது 65 வயது மனைவி ராசாத்தியிடம், பொங்கல் பரிசாக வாங்கி வந்த 1000 ரூபாயில் பாதியை கேட்டுள்ளார். இதனை ராசாத்தி தர மறுத்துவிட்டார்.
 
இதனால் ஆத்திரமடைந்த ராமர் ராசாத்தியை வெட்டி கொலை செய்தார். இதையடுத்து போலீஸார் ராமரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்