பொங்கல் பரிசுக்கு பொங்கல் வைத்த நீதிமன்றம்: 1000 ரூபாய்க்கு ஆப்பு!!

புதன், 9 ஜனவரி 2019 (12:59 IST)
பொங்கல் பரிசாக எல்லா குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அறிவித்திருந்த நிலையில், நீதிமன்றம் அந்த உத்தரவிற்கு தடைவிதித்துள்ளது.
தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழர்கள் அனைவரும் தயாராக இருக்கும் நிலையில் சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை வழங்கப்படும் என கூறியிருந்தார்.
அதன்படி இந்த பொங்கல் பரிசை வாங்க பொதுமக்கள் ரேசன் கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இன்று பொங்கல் பரிசு வாங்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
 
கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் அனைத்து மக்களுக்கும் 1000 ரூபாய் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் 1000 ரூபாய் வழங்கவேண்டும் எனவும் மக்களின் வரிப்பணத்தை இப்படி வீண்டிக்கக்கூடாது எனவும் கருத்து தெரிவித்தது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவற்றை அனைத்து மக்களும் பெற்றுகொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

NPHH மற்றும் NPHH-S ஆகிய கார்டுகளுக்கு 1000 ரூபாய் வழங்க தடைவிதித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசை நீதிமன்றம் காட்டமாக விமர்சித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்