வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்: சென்னைக்கு ஆபத்தா?

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (12:49 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் உருவாக்கிய டவ்தேவ் புயல் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை புரட்டிப்போட்ட நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்தம் தோன்றியுள்ளதாக தகவல் வந்துள்ளது
 
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் வங்க கடலில் புதிய காற்றழுத்தம் தோன்றி உள்ளதாகவும் அது மே 23-ஆம் தேதி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளார் ஆனால் அதற்கு முன்பே அதாவது மே 19ஆம் தேதி முதல் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது தான் கேரளா கடும் புயல் காரணமாக சேதத்தை சந்தித்துள்ள நிலையில் தற்போது தமிழகமும் அதே போன்ற ஒரு நிலைமை சந்திக்கும் நிலை உள்ளது. இந்த புயலால் சென்னைக்கு ஆபத்தா என்பது போகப்போகத்தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்