சமீபத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் பிரபல இயக்குனர் பாரதிராஜா இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா பேசியபோது இந்து கடவுள் வினாயகர் குறித்து அவதூறாகப் பேசியதாக கூறப்பட்டது. இதுகுறித்து இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் புகார்தாரர் நீதிமன்றம் சென்ற நிலையில் நீதிமன்ற உத்தவுபடி பாரதிராஜா மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை என்ற அமைப்பை தொடங்கியுள்ள பாரதிராஜா, சமீபகாலமாக ரஜினி உள்பட பலரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.