சுவாமி விவேகானந்தர், ஆன்மிகத்துக்குப் புதிய பொருள் தந்த மேதை. கடவுளை அறிதல், மோட்சம் தேடுதல் ஆகியவை எல்லாம் பெரிய ஞானிகளுக்கு மட்டுமே உரியவை என்பதை மாற்றி, சாதாரண மனிதர்களும் ஆன்மிக தரிசனம் பெற முடியும் என்பதை உரத்துச் சொன்னவர்.
இல்லறத்தில் வாழ்ந்தபடியே காமத்தையும், பணத்தாசையையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள். மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை. செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது தான் மதத்தின் முழுப்பரிமாணமாகும்.