பி.ஜி. நீட் தேர்வை தள்ளி வைக்க கோரி மருத்துவர்கள் வழக்கு

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (18:22 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே காரணம் காட்டி பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பி.ஜி. நீட் தேர்வு மட்டும் நடத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது
 
சிபிஎஸ்சி தேர்வுகள் கூட பத்தாம் வகுப்பிற்கு ரத்து செய்யப்பட்டது என்பதும், பன்னிரண்டாம் வகுப்புக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பி.ஜி. நீட்தேர்வு மட்டும் நடத்த மத்திய அரசு விடாப்பிடியாக இருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் முதுகலை பட்டப் படிப்புக்கான நீட்தேர்வை தள்ளிவைக்க கோரி மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலில் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மருத்துவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். தற்போது பி.ஜி. நீட் தேர்வை நடத்தினால் ஆயிரக்கணக்கான உயிர்கள் அபாயத்தில் சிக்கும் நிலை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்