வலிமை படத்தின் முக்கியப் பணியை முடித்த அஜித்… இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி!

வியாழன், 15 ஏப்ரல் 2021 (17:10 IST)
நடிகர் அஜித் வலிமை படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இன்னும் சில நாட்கள் வெளிநாட்டு படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இப்போது அஜித் வலிமை படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தையும் முடித்துள்ளாராம். வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்ததும் கிட்டத்தட்ட படம் ரிலீஸுக்கு தயாராகி விடும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்