கோப்ராவுக்கு முன் ரிலிஸாகும் விக்ரம் படம்! ஏன் தெரியுமா?

வியாழன், 15 ஏப்ரல் 2021 (17:05 IST)
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் 60 திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும் சிம்ரன் மற்றும் வாணிபோஜன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் விக்ரம்மின் முந்தைய படமான கோப்ராவுக்கு முன்னதாகவே வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஏனென்றால் கோப்ரா படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் வெளிநாடுகளில் நடத்தப்பட வேண்டுமாம். அதனால் அதற்கு முன்பாகவே இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாம் படக்குழு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்