முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவன் செய்த செயலா?

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (20:53 IST)
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் இதற்கு சிறுவன் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
 
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி அழைப்பு வந்து உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டது
 
இதனை அடுத்து போன் செய்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை செய்ததில் சென்னையிலுள்ள சிறுவன் புவனேஷ் என்பவரது செல்போனில் இருந்து தான் மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது.
 
இதனையடுத்து அந்த சிறுவனை விசாரணை செய்ததில் அந்த சிறுவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் இருந்து வந்து அன்பழகன் என்பவருடைய செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்