இன்று கேப்டன் விஜயகாந்த பிறந்தநாள்! – முதல் ஆளாக வாழ்த்து சொன்ன முதல்வர்!

வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (09:13 IST)
இன்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த சில ஆண்டு காலமாக உடல்நல பாதிப்பால் விஜயகாந்த் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவதில்லை. அவரது வருகையை அவரது தொண்டர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவரது பிறந்தநாளான இன்று பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ”என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு 70வது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. அவர் நலம் பெற்று நீடூடி வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்