ஜார்கண்ட் முதல்வர் பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை!

வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (16:06 IST)
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்தது தொடர்பான புகாரில், முதல்வர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம் , அம்மா நில கவர்னருக்கு பரிந்துரைத்துள்ளது.

டெல்லியில் மதுபான விற்பனை  உரிமை வழங்குதலில்  முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரில் துணை முதல்வர் சிசோடியா மீது சிபியை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஜார்ககண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்ண்ட் முக்தி மோர்சா  - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்,  முதல்வரின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா சுங்கச் சாவடி ஒதுக்கீட்டில் ஊழல் செய்வதாக எழுந்த புகாரில் அவர் மீது  போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில், முதல்வர் ஹேமந்த் சோரன் கட்சியைச் சேர்ந்த பலர் இந்த வழக்கில் சிக்கியுள்ள நிலையில், அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், பணப்பரிமாற்ற குற்றச்சாட்டு சம்பந்தமாக பங்கஜ் மிஸ்ராவின் அலுவகத்திலும் அவருடன் தொடர்புடையவர்களின் அலுவலகத்திலும்   அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.  இந்த சோதனையில் ரூ.13 கோடி பறிமுதல் செய்தனர். இதனால் மா நில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும்,  நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்தது தொடர்பான புகாரில், முதல்வர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம் , அம்மா நில கவர்னருக்கு பரிந்துரைத்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்