86 பேர்களில் டெல்லியில் இருந்து திரும்பியவர்கள் எத்தனை பேர்? பீலா ராஜேஷ்

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (19:01 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேர்களுக்கு கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்ற செய்தியைப் பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேர்களில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து டெல்லி மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த 6 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருவதும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 6 நாட்களில் அதாவது மார்ச் 31 ஆம் தேதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தற்போது பார்ப்போம். மார்ச் 31ஆம் தேதி 57 பேர்களும், ஏப்ரல் 1ஆம் தேதி 110 பேர்களும், ஏப்ரல் 2ஆம் தேதி 75 பேர்களும், ஏப்ரல் 3ஆம் தேதி 102 பேர்களும் ஏப்ரல் 4ஆம் தேதி 74 பேர்களும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை 5 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்