தமிழகத்தில் 16ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 24 மே 2020 (18:21 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 765 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,227 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 765 பேர்களில் சென்னையில் மட்டும் 587 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,576ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 8 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 833பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 8324 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று தமிழகத்தில் 11441 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 391,252 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்