அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

Prasanth K

திங்கள், 14 ஜூலை 2025 (13:56 IST)

இன்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் பல முக்கிய அறிவிப்புகளை எடுத்துள்ளார்.

 

அதில் அவர் “அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்டப்போராட்டத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. அதிமுக மீட்டெடுப்பிற்கான சட்ட போராட்டம் தொடரும். எதிர்காலத்தில் நமது நோக்கத்தை வென்றெடுப்போம். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தவே தர்மயுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

 

சட்டமன்ற தேர்தலில் மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராக ஆக முடியும். மேலும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில முடிவுகளை வெளியே சொல்ல முடியாது. செப்டம்பர் 4ம்ட் தேதி மதுரையில் மாநில மாநாடு எனது தலைமையில் நடக்க உள்ளது. நமது எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை மதுரை மாநாட்டில் அறிவிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்