கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை (மே25) முதல் விமான சேவைகளை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் ஜூன் 1 வரை விமான சேவைகளை ஒத்தி வைக்க முதல்வர் பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். எனினும் விமான பயணம் தொடங்கும் பட்சத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, விமானத்தின் மூலம் தமிழகம் வருபவர்கள் கண்டிப்பாக ஆன்லைன் பாஸ் பெற வேண்டும்.
விமான டிக்கெட் பெற்றவுடன் இ-பாஸ் வலைபக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் மற்றும் எந்த விமான நிலையத்திற்கு வந்து சேருவர் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
பயணிகள் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வரவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.