கொரோனா நிதி கொடுத்த 2 ஆம் வகுப்பு மாணவன்

Webdunia
சனி, 8 மே 2021 (23:20 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்நிலையில் மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் வசித்துவரும்   2 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவன் ஹரீஸ்வர்தன் தான் சேர்த்துவைத்துள்ள பணத்திலிருந்து ரூ.1000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

மேலும் சிறுவன ஹரீஸ்வரன் தான் சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்